கடமைகள் - Batticaloa Ads (Pvt) Ltd

01. அனுப்பப்படும் விளம்பரங்களை BATTICALOA ADS (PVT) LTD இனால் முடியுமானவரை ( BATTICALOA ADS (PVT) LTD இன் அதிகாரம் / சக்திக்கு உட்பட்ட அளவில் ) விபரங்கள் பரிசோதித்த பின்னரே விளம்பரங்கள் BATTICALOA ADS (PVT) LTD க்கு சொந்தமான அனைத்து பேஸ்புக் பக்கங்கள், பேஸ்புக் குழுமங்கள், இணையதளம் மற்றும் வாட்சப் குழுமங்களில் பதிவிடப்படுகிறது.

02. BATTICALOA ADS (PVT) LTD இன் அளவுகோலுக்கு உட்பட்ட விளம்பரங்களை மாத்திரம் BATTICALOA ADS (PVT) LTD க்கு சொந்தமான அனைத்து பேஸ்புக் பக்கங்கள், பேஸ்புக் குழுமங்கள், இணையதளம் மற்றும் வாட்சப் குழுமங்களில் செய்ய பதிவு முடியும்.

பொறுப்புக்கள் - Batticaloa Ads (Pvt) Ltd

01. அனுப்பப்படும் விளம்பரங்களை BATTICALOA ADS (PVT) LTD க்கு சொந்தமான அனைத்து பேஸ்புக் பக்கங்கள், பேஸ்புக் குழுமங்கள், இணையதளம் மற்றும் வாட்சப் குழுமங்களில் பதிவு செய்து பகிர்ந்து வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதே BATTICALOA ADS (PVT) LTD இன் பணி, இது தவிர வேறொன்றுக்கும் BATTICALOA ADS (PVT) LTD உத்தரவாதம் அளிக்காது.

02. கட்டணம் செலுத்தி விளம்பரம் செய்யப்பட்ட சொத்துக்கள்/ பொருட்கள்/ சேவைகள் விற்பனை ஆகாவிட்டால் அதற்கு BATTICALOA ADS (PVT) LTD பொறுப்பாகாது மற்றும் விற்பனையாகிவிடும் என்றும் உத்தரவாதம் அளிக்க முடியாது.

நிபந்தனைகள் - Batticaloa Ads (Pvt) Ltd

01. விளம்பரங்களால் ஏற்படும் நஷ்டங்கள், இழப்புபுகழ், தொந்தரவுகள், மற்றும் இதர விடயங்களுக்கு BATTICALOA ADS (PVT) LTD பொறுப்பாகாது.

02. விளம்பரங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர் விளம்பரதாரரின் வேண்டுகோளுக்கு இணங்க அது அகற்றப்பட்டால் அவற்றுக்காக BATTICALOA ADS (PVT) LTD வழங்கப்பட்ட சேவைக்கு கட்டணம் மீள் வழங்கப்படாது.

03. விளம்பரம் பதிவு செய்யும் அன்றைய தினம் வரைக்கும் இலங்கை அரசாங்கத்தினால் அனுமதி அளிக்கப்பட்ட சேவை / பொருட்கள் பற்றிய விளம்பரங்களை மாத்திரமே BATTICALOA ADS (PVT) LTD க்கு சொந்தமான அனைத்து பேஸ்புக் பக்கங்கள், பேஸ்புக் குழுமங்கள், இணையதளம் மற்றும் வாட்சப் குழுமங்களில் பதிவு செய்யப்படும் அதன் பின்னர் அவை தடை செய்யப்பட்ட சேவை/பொருட்களாக இலங்கை அரசாங்கத்தினால் அறிவிக்கப்படுமாக இருந்தால் அவை BATTICALOA ADS (PVT) LTD க்கு சொந்தமான அனைத்து பேஸ்புக் பக்கங்கள், பேஸ்புக் குழுமங்கள், இணையதளம் மற்றும் வாட்சப் குழுமங்களில் இருந்து முற்றாக அகற்றப்படும், விளம்பரதாரருக்கு செலுத்திய விளம்பர சேவைக் கட்டணம் மீள் வழங்கப்படாது.

04. BATTICALOA ADS (PVT) LTD நிறுவனத்திற்கு அனுப்பப்படும் விளம்பரங்களில் BATTICALOA ADS (PVT) LTD குழுவினரால் தெரிவு செய்யப்படும் விளம்பரங்களை மாத்திரம் BATTICALOA ADS (PVT) LTD க்கு சொந்தமான அனைத்து பேஸ்புக் பக்கங்கள், பேஸ்புக் குழுமங்கள், இணையதளம் மற்றும் வாட்சப் குழுமங்களில் பதிவு செய்ய முழு அதிகாரமும் சுதந்திரமும் BATTICALOA ADS (PVT) LTD நிறுவனத்திற்கு உண்டு.

05. Facebook இன் தொழில்நுட்ப கோளாறு, குறைபாடுகள், Facebook இன் தவறான புரிதல் மற்றும் இதர காரணங்களினால் பகிரப்பட்ட விளம்பரங்கள் அகற்ற படுமாயின் முடியுமானவரை மீள் பெற்றுக்கொள்ள முழு முயற்சிகளையும் BATTICALOA ADS (PVT) LTD இன் குழு மேற்கொள்ளும் முயற்சிகள் பயனளிக்காமல் போகும்பட்சம் அதற்கு BATTICALOA ADS (PVT) LTD பொறுப்பாகது.

06. வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் சம்பந்தமான விளம்பரங்களை Batticaloa Ads PVT LTD இல் பதிவு செய்வதாக இருந்தால் கண்டிப்பாக அவ் விளம்பரத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் உடைய பதிவு இலக்கம் (Labour Licence No) மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் அவ் வேலைக்கு வழங்கப்படும் கட்டளை இலக்கம் (Job Order No) குறிப்பிடப்பட்டு இருத்தல் வேண்டும், பதிவு இலக்கம் மற்றும் கட்டளை இலக்கம் குறிப்பிடப்படாத விளம்பரங்கள் நிராகரிக்கப்படும்.

07. நிதி சார்ந்த சேவைகள் (உ.ம் : நிதி குத்தகை, நிதி கடன்), பதிவு செய்யப்படாத அழகுசாதனப் பொருட்கள் / சேவைகள், மதுபானம், ஆன்லைன் வருவாய் /அது சார்ந்த சேவைகள் மற்றும் சில வகையான நிகழ்வுகள் போன்றவற்றை எமது Batticaloa Ads PVT LTD க்கு சொந்தமான எந்த பேஸ்புக் பக்கங்கள், பேஸ்புக் குழுமங்கள், இணையதளம் மற்றும் வாட்சப் குழுமங்களில் பகிர்ந்து விளம்பரப்படுத்த முடியாது.

மேலும் விரிவான நிபந்தனைகளை (ஆங்கிலத்தில்) தெரிந்து கொள்ள கீழுள்ள இணைப்பை அழுத்தி அறிந்து கொள்ளுங்கள்
Terms & Conditions (English)

குறிப்பு : மேல் குறிப்பிட்டுள்ள கடமைகள், பொறுப்புக்கள் மற்றும் நிபந்தனைகளை திருத்துவதற்கு, புதிதாக இணைப்பதற்கு மற்றும் அகற்றுவதற்கு முழு உரிமையும் அதிகாரமும் BATTICALOA ADS (PVT) LTD உண்டு.

Last Updated : 01-01-2025